ஆபிரிக்க கண்டத்தின் பல பகுதியில் பரவும் எம்பொக்ஸ் தொற்றுப்பரவல் உலகில் அவதானத்திற்குரிய பொது சுகாதார அவசர நிலையாக மாறியுள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. கொங்கோ இராச்சியத்தில் குறித்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களில் 450 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகாலத்தில் இந்த தொற்றுப் பரவில் மங்கிபொக்ஸ் என அடையாளப்படுத்தப்பட்டது. புருண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, கென்யா மற்றும் ருவண்டா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
பாலியல் தொடர்புகள் மற்றும் வேறு நெருக்கமான தொடர்புகள் ஊடாக இந்த நோய் மனிதர்களுக்கிடையில் பரவுகின்றது. காய்ச்சல், உடலில் காயம் ஏற்படல் போன்றவை இதன் நோய் அறிகுறிகளாகும். இதனால் பாதிக்கப்படும் 100 பேரில் நால்வர் மரணத்தை எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.