ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ஷ,
”அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன்”. என்றார்.