வத்தளை, ஹெந்தல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றுடன் மோதியுள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதியின் தரப்பின் வேன் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் வேன் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலை வேனின் சாரதி கையடக்க தொலைபேசி பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.