டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34,053 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 13,822 ஆகும்.
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.