77வது Locarno திரைப்பட விருது விழாவில் இந்தியாவின் பிரபல பொலிவூட் நட்சத்திரம் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் கடந்த சனிக்கிழமை இந்த விருது விழா இடம்பெற்றது.
அவருக்கு Pardo Alla Carriera என்ற விருது இதன்போது வழங்கப்பட்டது. இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஷாருக்கானின் பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது விழாவில் பங்கேற்ற ஷாருக்கானுக்கு அங்குள்ள ரசிகர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.