எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளார். இன்று காலை மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.