அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லேன்ட் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று ஹோட்டலொன்றின் கூரை மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் விமானி உயிரிழந்துள்ளார். அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இரண்டு மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதையடுத்து, ஹோட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் குயின்ஸ்லேன்ட் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.