ஹமாஸின் முன்னாள் தலைவர் ஹிஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதன் பின்னர் குறித்த அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு காஷாவில் அகதி முகாமொன்றில் பிறந்த யஹ்யா சின்வாரின் குடும்பம் இஸ்ரேலின் அழுத்தங்களால் காஷாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தது. இளம் வயதிலிருந்தே தனது சொந்த நாட்டிற்காக சின்வார் போராடி வந்தார்.
ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து, அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையில் தமது படைவீரர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் யஹ்யா சின்வார், இஸ்ரேலினால் சிறைத்தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.
22 வருடங்களை சிறையில் செலவிட்ட சின்வார், விடுதலையாதன் பின்னர் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். ஹமாஸ் இயக்கத்தின் செயற்பாடுகள் திட்டங்களை வழிநடத்தி வந்த அவர் ஹிஸ்மாயில் ஹனியாவின் உயிரிழப்புக்கு பின்னர் அதன் அரசியல் விவகாரங்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.