யாழ், பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று (11) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பூநகரி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.