ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷவை ஆதரித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன, விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துருகிரிய, ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்ரிபால அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் பங்கேற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது அணியினருடன் இன்று விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.