திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கோணேஸ்வரர் ஆலயம் ஒன்றும் வங்கி அல்ல, குற்றம் இல்லை என்றால் ஏன் தவறுகளை மூடி மறைக்க முயல்கிறீர்கள், யாரை காப்பாற்ற ஏன் இந்த கபடம், ஆளுநர் அவர்களே அதிகார வர்க்கத்திடம் இருந்து கோவிலை பொதுமக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.