இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான இயன் பெல்இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயன் பெல்லை இலங்கை அணியின் துணைப் பணியாளர்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் நாட்டின் ஆடுகளம் மற்றும் வானிலை குறித்து சிறப்பான புரிதலை பெற முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.