33 வது ஒலிம்பிக் திருவிழா பரிஸில் கடந்த ஜூலை 26 ம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது.
206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன.
கடந்த 16 நாட்களாக நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது.
பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகளும் முடிவடைந்த பின்னர் இரவு 12.30 மணி அளவில் பிரம்மாண்டான நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது.
நிறைவு விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
கோலாகலமாக நடைபெறும் நிறைவு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து நடனமான உள்ளதாக பரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.