எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது