பேஸ்போல் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பேஸ்போல் விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவரும் தற்போது ஆசிய பேஸ்போல் சங்கத்தின் நடுவர் குழாம் பணிப்பாளருமான சுஜீவ விஜயநாயக்கவின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
அவரின் பேஸ்போல் விளையாட்டு வாழ்க்கையின் 25 வருடகால நிறைவை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முப்படை மற்றும் 100 பேஸ்போல் சங்கங்களுக்கென இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன , ஆனந்தா கல்லூரியின் அதிபர் டீ.எம்.எல்.பீ.திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டார்.