எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக கடமையாற்றியுள்ள அவர் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த விஜித் விஜயமுனி சொய்சா, கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார்.