கண்டி பெரஹர உற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய எசல பெரஹெரவின் முதலாவது குபல் பெரஹெர இன்று மாலை 6.06க்கு வீதி உலா வரவுள்ளது.
பெரஹெர நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்கென 600 பொலிசார் கடமையில் ஈடுபட்டள்ளனர். பெரஹெரவை பார்வையிட வருகை தருபவர்களின் பாதுகாப்பு கருதி விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.