பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வநாயகம் பொனிபஸ் என்ற நபர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.