தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க 7 தோட்டக் கம்பனிகள் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் இளையோர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொழில் அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்வாக சபை அழைக்கப்பட்டு இது தொடர்பில் கலந்துரையாடப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையேற்படின் விசேட சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.