ஜனாதிபதி செயலாளருக்கு இழப்பீடு செலுத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தற்போதைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்வதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
குறித்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபால அபேரத்ன வகித்திருந்தார்.
அப்போதைய பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ரத்து செய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு கட்டணமாக 150,000 ரூபாவை சமன் ஏக்கநாயக்கவிற்கு செலுத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு ஆணையிட்டது.