கென்ய தலைநகர் நைரோபியில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு அந்நாட்டு பொலிசார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தியுள்னர்.
வரி அதிகரிப்பு தீர்மானத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கென்ய ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இளைஞர்களின் பங்கேற்புடன் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஜூன் மாதம் வரை அமைதியான முறையில் இடம்பெற்ற போதிலும் தற்போது அவை வன்முறையாக மாறியுள்ளதாக கென்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல்களினால் இதுவரை 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.