வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (X) வலைத்தளம் 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நான் கையெழுத்திட்டுள்ளேன் என வெனிசுவெலா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.