நாட்டின் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.