யாழ்ப்பாணம் அராலி ஆலடி சந்திக்கு அண்மையில் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய குழுவினருக்கும் குறித்த இளைஞர்களுக்குமிடையில் ஏற்கனவே முறுகல் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.