பங்களாதேஷிலுள்ள அனைத்து இந்திய வீசா விண்ணப்ப மத்திய நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்ப்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரை மத்திய நிலையங்களை மூடவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பங்களாதேஷிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கொன்சல் காரியாலயம் உட்பட அத்தியாவசியமற்ற அலுவலக குழுக்களையும் அங்கிருந்து மீளப் பெறுவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷில் ஏற்ப்பட்ட போராட்டங்களையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு அடைக்கலம் தேடிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.