பெரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் இறுதியாக அங்கத்துவத்தை வழங்கிய தில்ஹானி லேகம்கே மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் முதற் சுற்றில் நேற்று பங்கேற்றிருந்தார்.
முதற் சுற்றில் அவர் 16ம் இடத்தை பெற்றுக்கொண்டார். அவரின் அதிகபட்ச திறமை வெளிப்பாடு 53.66 மீற்றராக இருந்தது. அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தில்ஹானி லேகம்கே இழந்தார்.
எனினும் ஒலிம்பிக் வரத்தை பெற்றுக்கொண்ட இலங்கையின் மிகவும் வயதுகூடிய 3வது வீராங்கணையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.