இனவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ள போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இங்கிலாந்தின் பல நகரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான இனவாத எதிர்ப்பு போராட்ட குழுக்கள் ஒன்றுகூடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறிய நிலையில் சொத்து சேதங்கள் பல பதிவாகியுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை சிலர் மேற்கொண்டு வருகின்ற போதிலும், கலவரத்தை தூண்டும் நோக்கில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவதாக பிரித்தானிய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு 400க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சில இடங்களில் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதி ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.