கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கணினி சாதனங்களில் மறைத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவற்றின் மதிப்பு ஐந்து கோடியே பதினோரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
டுபாயில் இருந்து விமான அஞ்சல் பொதி சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலைக்கு 63 கணினி சாதனங்களுடன் பொதிகளுடன் அனுப்பப்பட்ட 5 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைது செய்யப்பட்டுள்ளது