ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் எதிர்வரும் 14 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனுக்கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.