உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் குறைவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் டெக்சாஸ் இடர்மிடியேட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 அமெரிக்க டொலராக இன்று காணப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 வீதத்தால் குறைவடைந்திருந்ததுடன் அது ஜனவரி மாதம் பதிவான மிகவும் குறைந்த விலையாக காணப்பட்டது.