இரத்மலானை ரயில் நிலையத்திலிருந்த பெறுமதியான இரும்பு பாகங்களை களவாடிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவற்றின் பெறுமதி 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 22 முதல் 29 வயதிற்கிடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிஸ்சை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.