இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 32 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என இலங்கை முன்னிலை வகிக்கின்றது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.
அவிஸ்க பெர்னான்டோ மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 40 ஓட்டங்களை பெற்றனர். வோஷிங்டன் சுந்தர் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 241 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 64 ஓட்டங்களையும் அக்ஷர் பட்டேல் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெப்ரி வென்டர்சே 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.