இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் Kamindu Mendis 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Washington Sundar 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.