பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை மற்றும் ஸ்டன் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பங்களதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பங்களதேஷில் இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.