மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழிற்துறையாளர்கள் சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினர். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு முகங்கொடுக்க நேரிடுமெனவும் இந்த நிலை ஏற்படாது தடுப்பது அனைத்து தொழிற்துறையாளர்களினதும் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்துறையாளர்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு சன்ஷைன் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மகளிர் அமைப்புக்கள், வர்த்தக சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.சிவனாதன் உள்ளிட்டோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.