குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த இசைக் கச்சேரியை ‘எதேர அபி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.