வெல்லவாய, ஊவ குடா ஓய கமான்டோ ரெஜிமென்ட் பயிற்சி கல்லூரியில் பயிற்சியின் பின்னர் படையினர் விடைபெற்று செல்லும் பிரியாவிடை நிகழ்வின் போது இடம்பெற்ற பெரசூட் விபத்தில் இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே தலைமையில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு சென்ற பெரசூட் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளது. மற்றைய பெரசூட் வேகமாக நிலத்தை நோக்கி வந்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.