புத்தளயிலிருந்து கதிர்காமம் வரை யால தேசிய பூங்காவின் மத்தியிலுள்ள வீதிகளில் இரவு நேரத்தில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் வீதிகளில் அவை இருப்பதால் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டமாக அல்லது தனியாக புலிகள் வீதிகளில் இருப்பதுடன் தற்போது நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக நீரைத் தேடி அவை இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளுக்கு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.