இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 295ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டதுடன் 40க்கும் அதிகமான மீட்பு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
6 இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மண்மேடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக கேரள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வயநாடு மண்சரிவு அனர்த்த நிவாரணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள முன்னணி பிரபலங்கள் நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.