எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
கட்சியின் செயற்குழு நேற்றைய தினம் இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்தது. இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுபோன்ற ஒன்றிணைவே அவசியமென சுட்டிக்காட்டினார்.
1946ம் ஆண்டுக்கு பின்னர் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணையும் காலம் தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னேற்றுவதில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை கேட்டறிவது தமது இலக்கு எனவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய கொள்கையொன்றை தயாரிப்பது அவசியமெனவும் தெரிவித்தார்.