நோட்டன் பிரிட்ஜ் பகுதியிலிருந்து கிரிவன்எலிய வரை பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
இதில் இருவர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றிற்கு இடமளிக்க முயற்சித்த போதே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.