நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இன்று (27) காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 47 வயதுடைய கலகெடிஹேன, கலட்டுவாவ பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.