தலங்கம – கொஸ்வத்த பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் கடுவலையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீகொடவில் இருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் கடுவலையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.