தமிழ்நாட்டின் சென்னையில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக சென்னையின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ராஜிவ் காந்தி வைத்தியசாலைக்க முன்பாக நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகுஜன் சமாஜ் கட்சின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலைக்கு நீதி வேண்டி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.