இவ் ஆண்டுக்கான எசல பண்டிகை இன்று (06) ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல்; ஜூலை 22 ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.