சுங்கத் திணைக்களப் பணியாளர்கள் சங்கம் நாளையதினம் (04) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
சுங்கத்திணைக்களம், வருமான வரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.