சிட்னியில் பல்கலைக்கழகமொன்றிற்குள் கத்திக்குத்து தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிட்னியிலுள்ள ஏனைய பல்கலைக்கழங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 22 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உடல் நிலை தேறி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.