இளைஞர் பரம்பரைக்கு தேவையான எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் கருத்தாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் புதிய பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக புதிய பயணத்தை செல்ல வேண்டியுள்ளது.
இதன்போது இளைஞர் சமூகம் பிரதான பொறுப்புக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாறை எச்.எம்.வீரசிங்க மைதானத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியின் ஒரு பகுதியை சுற்றுலாத்துறைக்கு வழங்கி எஞ்சியுள்ள பகுதியில் இளைஞர் பொழுதுபோக்கு நிலையமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.