தமக்கென தேசிய கொள்கையொன்றை தயாரிக்குமாறு கோரி கல்வி சாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்றைய தினம் கல்வி சாரா ஊழியர்கள் இந்த வேலைநிறுத்ததத்தை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறெனினும் இனறைய தினம் அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.