காஷாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் அமைந்துள்ள பகுதி மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 22 பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக கட்டிடத்திற்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய தரப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. அத்துடன் தாக்குதலுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லையென சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இது போன்ற தாக்குதல்களினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், தன்னார்வு ஊழியர்களின் கடமைகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.